Monday, March 22, 2010

நாய்க்குட்டியை வசியம் செய்தல்.

ஒரு நாய்க்குட்டியை
வசியப்படுத்துவதென்பது
ஒரு கலை.

முதலில் தாயோடு இருக்கும் குட்டிகளில்
செழிப்பானதொரு செவளையையோ
வெள்ளையையோ தெரியாமல்
கவர வேண்டும்.
கருப்புகள் வளர்ந்தபின்
வசீகரிப்பதில்லை,
எனவே அவை வேண்டா !

உங்கள் விட்டுக்கு வந்தபின்
கழுத்தில் சிறு மணி கோர்த்து
விலைஉயர்ந்த ஒரு
சங்கிலியில் கட்ட வேண்டும்.

பின்பு தனியாய் அது
தூங்கிக் கொண்டிருக்கும் போது
சீட்டி அடித்தோ சத்தம் செய்தோ
அதன் கவனத்தை உங்கள் பக்கம்
நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்

உங்களுக்கு பிடித்த ஒரு
செல்லப் பெயர் கொண்டு
அதைக் கொஞ்ச வேண்டும்
முதுகை தட்டிக் கொடுத்தல்,
சிற்சிறு முத்தங்கள்
சீக்கிரம் பலன் தரும்

இப்போது அது
உங்களைப் பர்த்தவுடன் வாலாட்டும்.
இந்த பருவம் மிக முக்கியம்
கொஞ்சம் சிரமம் பாராமல்
ரொட்டித் துண்டும், பாலும்
கொடுத்து பரிவுடன்
தடவிக் கொடுக்க வேண்டும்

இனி அது உங்களை
பார்த்தவுடன்
செல்ல சத்தம் எழுப்பி
காலைப் பிடித்துக் கொண்டு
விளையாட ஆரம்பிக்கும் - நீங்கள்
'ஷேக் ஹேண்ட்" கொடுக்க,
தாவி பந்தை பிடிக்க என
புதுப் புது விளையாட்டை
சொல்லிக் கொடுக்க வேண்டும்

அந்த குட்டி இனி உங்கள் வசம்
உங்கள் பார்வைக்கு, விரலசைவிற்கு
அடிமையாய் வாலாட்டி
எப்போதும் உங்களையே
சுற்றத் துவங்கி விடும்.

இப்போது,
நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல்
உங்கள் வேலையை செய்ய வேண்டும்
உங்களை தொந்தரவு செய்து
எரிச்சல் படுத்துவது போல
குழையக் குழைய வலம் வரும் போது
எட்டி உதைத்து தள்ள வேண்டும்

நீங்கள் எத்தனை முறை தள்ளினாலும்
வாலாட்டிக் குழைவதை ஒரு போதும்
நிறுத்தாது அந்த அடிமை.
ஏனென்றால்,
உங்கள் வசியம் அப்படி.

இதே முறையை நீங்கள்,
பெண்களை வசியம்
செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

ஜாக்கிரதை !
ஒரு பூனைக் குட்டியை
வசியம் செய்ய
இந்த முறையை
பயன்படுத்தாதீர்கள்.

3 comments:

  1. வசியத்திற்கு ஓர் புதிய வில்லகம் கொடுத்து விட்டீர் போங்கள் அருமை நண்பரே

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. சகோதரரே உங்கள் பதிவு மிகவு அற்ப்புதம் என்னக்கு எப்படி சொல்வது என்றே புரியவில்லை மொத்ததி நன்று நன்று வாழ்க வளமுடன் மென் மேலும் சிறப்பாக வளர்ச்சிபெற எல்லாம் வல்ல மடவார் விலக சிவனை வணங்கி வேண்டி கொள்கிறேன்

    ReplyDelete

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.