
நெற்றியில் முத்தமிட்டு, சூடான காஃபி...
ஆர்டின் வடிவத்தில் சுட்டுக் கொடுத்த தோசை...
இருவரும் சேர்ந்து துவைத்த சேலை...
கேட்டுக் கேட்டு, ஆர்வமாய் செய்த அரைகுறை சமையல்...
தோளில் சாய்ந்து ரசித்துப் பார்த்த ஐஸ்க்ரீம் சினிமா...
...............
எல்லா ஞாயிறும் தவறாமல், எப்படித்தான் ,
மேன்ஷன் அறைக்குள் நுழைகிறதோ
தடை செய்யப்பட்ட இந்த கனவு மட்டும்.
ஆக்கம் : படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3
பேசும் கவிதைகள் தொகுப்பிற்காக.